நாம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் – பணி முடக்கம் தோல்வியுற்றது, எமக்கு புதிய சிந்தனை தேவை

கடந்த இரண்டு வாரங்களில் கண்டறியப்பட்ட புதிய தொற்றுகள் குறித்து எங்களுக்குத் தெரிந்த விவரங்களை வைத்துப் பார்த்தால் திங்களன்று (ஏப்ரல் 27) கொழும்பில் ஊரடங்கு உத்தரவை நீக்குவது உட்பட, COVID கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை தளர்த்துவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது. இது மிகப்பாரிய மற்றும் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய கொள்கை தோல்வி மட்டுமன்றி மிக மோசமான தவறாகும். பொறுப்புக்கூறல் என்பதற்கு இந்த நாட்டில் அர்த்தம் ஏதேனும் இருந்தால், தற்போதைய சுகாதார செயற்பாடுகளை வடிவமைப்பதில் பங்குகொண்டவர்களுக்கு எதிராக விளைவுகள் இருந்திருக்கும். தெளிவுபடுத்திக்கூறுவதாயின், நான் இங்கு ஜனாதிபதியை குறிப்பிடவில்லை ஏனெனில் இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் மீது நம்பிக்கை வைத்தே செயல்பட்டுள்ளார். Continue reading

முதல் தேசிய COVID ஆய்வு இலங்கையில் சமூக ஆய்வுகளுக்கான சவால்களை சுட்டிக்காட்டுவதோடு குழு நோய் எதிர்ப்பு சக்தி ஏன் செயல்படாது என்பதையும் காட்டுகிறது

உலகின் முக்கிய நாடுகளில் கோவிட் -19 நோய்த்தொற்றின் முதல் தேசிய கணக்கெடுப்பினை கண்டுபிடிப்புகளை கடந்த வாரம் (ஏப்ரல் 10), ஆஸ்திரியா வெளியிட்டது. தொற்றுநோய் கடுமையாக தாக்கியிருந்தாலும்,ஆஸ்திரியாவில் நூறில் ஒருவர் மட்டுமே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோவிட்-19 வைரசிற்கு குழு நோய் எதிர்ப்பு சக்தியை உபாயமாக கொள்வது, எந்த ஒரு அறிவுடைய நாட்டிலும் சாத்தியாமான பதில் என்னும் கருத்தை தகர்த்தெரிகிறது. இலங்கை போன்ற நாடுகளில் சமூக பரவல் கணக்கெடுப்புகள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளுவன என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். Continue reading

எங்கள் விமான நிலையங்களைத் திறக்கவேண்டும் என்றால் பரிசோதனை திறனை விரிவுபடுத்த இப்போதே தொடங்க வேண்டும்

எதிர்காலத்தில் அனைத்து சர்வதேச வருகைகளையும் கோவிட் -19 வைரஸிர்க்காக, ஏன் பரிசோதித்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் முன்னர் விளக்கினோம். இவ்வாறு செய்யக்கோரி GMOA ஒரு கடித்தத்துடன் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். மார்ச் மாத துவக்கத்தில் நடந்ததின் அடிப்படையிலும் தற்போது நம்மிடமுள்ள விஞ்ஞானபூர்வமான தரவுகளின் அடிப்படையிலும் இந்த முயற்ச்சி சிறந்தது என ஆமோதிக்கிறோம். Continue reading

நீக்குதலை இலக்காக ஏற்றுக்கொண்ட முதல் ஆசியரல்லாத, மேற்கத்திய நாடாக நியூசிலாந்து திகழ்கிறது

நோய்பெருக்கில் இருந்து வெளியே வருவதற்கு எங்களுக்கும் இருக்கும் பாதைகள் குறித்த கட்டுரையை இன்னும் எழுதிக்கொண்டிடுப்பதால் இதை முன்னதாகவே பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் SARS-னால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளே தற்போதைய சூழலில், இதுவரை மிகவும் வெற்றிகண்டுள்ளன. இதுவே அவர்களை பின்பற்றுவதில் ஒரு முட்டுக்கட்டையாக எங்கள் மனதில் உருவாகியுள்ளது என்று நினைக்கிறேன். இது அவர்களுடன் எங்களுக்கு பல கலாச்சார ஒற்றுமைகள் இருந்தபோதும், அவர்களில் சிலரின் சுகாதார சேவைகள் அமைந்திருக்கும் விதம் நம்மை ஒத்து இருந்த போதும் உள்ளது.

நியூசிலாந்து இப்போது நோய்பெருக்கை குறைப்பதை விட நேரடியாக நீக்குவதை தேர்ந்தெடுத்துள்ளது. இது அவ்வாறு செய்த முதல் மற்றும் ஒரே ஆசியரல்லாத, மேற்கத்திய நாடு ஆகும். Continue reading

நமக்கு எவ்வளவு கோவிட் பரிசோதனைகள் தேவை: (3) நாம் யாரை சோதிக்க வேண்டும்?

இலங்கை ஒரு நாளைக்கு 2,000–6,000 ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளோம். MOH தொற்றுநோயியல் பிரிவு ஒரு நாளைக்கு 5,000 பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று மதிப்பிடுகிறது என்பதை நாங்கள் அறிந்தோம். இது அடிப்படையில் அதே எண்ணாகும், ஏனெனில் எங்கள் மதிப்பீடுகளில் விமான நிலைய வருகையை பரிசோதனை செய்வது அடங்கும், மேலும் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குழுக்களை ஏன் சோதிக்க வேண்டும் என்பதற்கான கூடுதல் விளக்கத்தை நாங்கள் இங்கு வழங்குகிறோம். அறிக்கையின் திருத்தப்பட்ட பதிப்பில் இதை நாங்கள் சேர்ப்போம். இதை வழங்குவதில், நாங்கள் இரண்டு விஷயங்களை வலியுறுத்துகிறோம். Continue reading

தேசிய கோவிட் PCR பரிசோதனைகளின் தேவைகள் பற்றிய எங்கள் மதிப்பீடுகள் : (2) தொழில்நுட்ப மதிப்பீடுகள்

இலங்கை கோவிட் பரிசோதனையை ~ 250-ல் இருந்து குறைந்தது ஒரு நாளைக்கு 2,000 RT-PCR பரிசோதனைகளாக அதிகரிக்க வேண்டும். அறியப்பட்ட கோவிட் நோயாளிகளின் தொடர்புகளை விரைவாகச் சமாளிக்க வேண்டிய ஒரு பெரிய பின்னிணைப்புஉள்ளது உள்ளது. அடுத்த 12 மாதங்களில் நாட்டையும் பொருளாதாரத்தையும் ஒருவித இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கும் பரிசோதனைத் திறனையும் நாங்கள் வைக்க வேண்டும். Continue reading

தேசிய COVID PCR பரிசோதனைகளின் தேவைகள் பற்றிய எங்கள் மதிப்பீடுகள்: (1) முன்னுரை

சோதனை விகிதத்தை அதிகரிக்க இலங்கைக்கு இன்று மிக அவசரமான தேவை. ஒரு நாளைக்கு 250 சோதனைகள் இருக்கும் தற்போதைய சோதனை விகிதம் முற்றிலும் போதாது. இது பூட்டான், மாலத்தீவு மற்றும் வியட்நாம் போன்ற வளரும் நாடுகளை விட மிகக் குறைவு. ஏப்ரல் இறுதிக்குள் இலங்கை அமல்படுத்த வேண்டிய ஆர் டி-பி.சி.ஆர் பரிசோதனைத் திறன் குறித்த எங்கள் ஆரம்ப மதிப்பீடுகளின் விவரங்களை இங்கு எழுதப்போகிறேன். அதைச் செய்வதற்கு முன், ஒரு சிறிய முனுரை. Continue reading

சிறப்பான தலைமைத்துவதிற்கு Brandix-க்கு நன்றி!

COVID-19 நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்கு Brandix நிறுவனம் தனது நிர்வாக உத்தியோகத்தர்களின் ஊதியத்தில் பாரிய குறைப்புகளை செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரோஃப் ஓமார் தனது ஊழியர்களிடம் அன்மையில் கூறியுள்ளார். அவரது ஊதியத்தையும் ஏனைய மற்றும் அனைத்து இயக்குநர் சபை உறுப்பினர்களின் ஊதியத்தையும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி, மேலும் அனைத்து மேலாளர்களின் ஊதியங்களையும் 5% முதல் 60% வரை Brandix குறைக்கிறது. Continue reading

கோவிட்-19 நெருக்கடி விரைவில் முடிவடையாது – நீண்ட கடும் நடை ஒன்றுக்கு நாங்கள் தயாராக வேண்டும்

தற்போவது உள்ள அனைத்து பணிகளின் முடக்கம் இங்கே மட்டுமல்ல, உலகில் உள்ள இரண்டு பில்லியன்/ 20 கோடி மக்களை பாதித்து வருகிறது இது கோவிட்-19 எவ்வளவு அபாயமானது என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தயிருக்க வேண்டும். பலர் இன்னும் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், நம் துறைமுகங்களை மூடுவதோ ஒரு மாதம் வரை அனைத்து பணிகளும் முடக்கப்படுவதோ இப்பிரச்சனைக்கு முடிவு காணாது. Continue reading

தற்போதைய MOH மூலோபாயத்தை விட செலவு பயன் பகுப்பாய்வு அதிக சோதனையை ஆதரிக்கிறது

பணிநிறுத்தம் (தேசிய ஊரடங்கு உத்தரவு, வீட்டிலிருந்து வேலை செய்தல், பள்ளி மூடல்) மற்றும் வெளிநாட்டு வருகையாளர்களின் தொடர்புகளை MOH தேடுதல் ஆகியவை நோயின் தற்போதைய வெடிப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவும். மேலும் பத்து நாட்களுக்குள் புதிய நோய்தொற்றுகளை பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வரக்கூடும். சமீபத்திய தரவுகளில் அது நடப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

வைரஸின் பரவலைத் தடுக்க MOH-இன் மூலோபாயம் செயல்படும், ஆனால் அது போதுமானதும் இல்லை அதைத் தக்கவைக்கவும் முடியாது. தற்போது பொருளாதாரம் இயங்க முடியா நிலை, வேலையின்மை அதிகரிக்கும், வணிகங்கள் நொடித்துவிடும், வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடையும், அரசாங்கத்திற்கு வருவாய் இராது. அன்றாட வாழ்க்கையை மீண்டும் துவங்கவும் பொருளாதாரம் முன்னேறவும் வணிகங்களையும் பள்ளிகளையும் திறக்க நாம் அனுமதிக்க வேண்டும்.
Continue reading