சிறப்பான தலைமைத்துவதிற்கு Brandix-க்கு நன்றி!

COVID-19 நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்கு Brandix நிறுவனம் தனது நிர்வாக உத்தியோகத்தர்களின் ஊதியத்தில் பாரிய குறைப்புகளை செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரோஃப் ஓமார் தனது ஊழியர்களிடம் அன்மையில் கூறியுள்ளார். அவரது ஊதியத்தையும் ஏனைய மற்றும் அனைத்து இயக்குநர் சபை உறுப்பினர்களின் ஊதியத்தையும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி, மேலும் அனைத்து மேலாளர்களின் ஊதியங்களையும் 5% முதல் 60% வரை Brandix குறைக்கிறது.

உலகின் பெரிய வணிக நிறுவனங்கள் பலவும் , குறிப்பாக விமான நிறுவனங்கள் பல மாதங்களாக இவ்வாறு செய்து வருகின்றன. அதிக லாபகரமான (அரசுக்கு சொந்தமான) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பல வாரங்களுக்கு முன்பே சம்பள குறைப்பும் ஊழியர்களை தற்காலிக ஊதியமற்ற விடுமுறையில் வைத்திருப்பதையும் நடைமுறைபடுத்தத் துவங்கியது. தற்பொழுது இந்த குறைப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

உலகெங்கிலும் கேள்வியில் ஏற்பட்டுள்ள கடும் சரிவினால் நமது மிகப்பெரிய ஏற்றுமதியாளரான Brandix பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனைய பல நிறுவனங்களுக்கும் நிலைமை இருண்டதாகத்தான் இருக்கும். அடுத்து வரும் ஆண்டில் நிலைமை மேலும் மோசமடையும். வேலை இழப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும், பணமில்லாமல் பல வியாபார அமைப்புகள் திவாலாகிவிடும்.

நமது பொருளாதார ஆதாரத்தை தக்கவைத்துக்கொள்ளவும், இச்சூழலில் தப்பிப் பிழைக்கவு வணிக நிறுவனங்கள் தங்கள் பணம் வெளிச்செல்வதை குறைக்க கடுமையான ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். வேலை நீக்கம் செய்வதும் நிறுவனங்கள் திவாலாவதுமே மிகவும் மோசமான விளைவாகு. பல தசாப்தங்களாக வரிகளை குறைத்தும் வந்துள்ள நிலையில், நம் அரசாங்கத்திடம் நிறுவனங்களுக்கு பிணை வழங்கி காப்பாற்றவோ, வேலை இழக்கும் மக்களுக்கு பணம் கொடுப்பதற்கோ பணம் இல்லை.

சம்பளத்தை குறைப்பதே சிறந்த வழியாகும். அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இதற்கு முன்மாதிரியாக இல்லாமல் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள் – வருமானம் அத்தியாவசியமாக தேவைப்படும் வர்க்கதினர் – ஊதியக் குறைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க முடியாது. மேலும் நிதி நிலைமையை பாதுகாக்க உரிமையாளர்களுக்கு தரப்படும் பங்கு லாபத்தைக் குறைக்கவும் வேண்டும்.

நாம் அனைவரும் சிறிதளவு வலியை எற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மிகவும் பாதிப்படையக்கூடிய நிலைமையில் இருப்பவர்கள் பாதுகாக்கபட்டு, மேல் மட்டத்தில் உள்ளோர் இச்சுமையில் பெரும்பங்கை ஏற்றுக்கொண்டால் மக்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள்.

எனவே Brandix-க்கு நன்றி! உண்மையான சமூக பொறுப்புணர்வு என்பது சிறந்த முன்மாதிரியாக இருப்பது.

இன்னும் அவ்வாறு செய்யாத ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைப் பொறுத்தவரை, நான் வருத்தப்படத்தான் முடியும். அவர்களின் கொள்கையானது தமது சொந்த ஊழியர்களன்றி ஏனைய அனைவரும் – வரி செலுத்துவோர் மற்றும் பொதுமக்கள், அவர்களை தாங்கி பிடிக்க வேண்டும் என்பதாகும். அவர்களும், நஷ்டத்தை ஏற்படுத்தும் பிற அரச நிறுவனங்களும் Brandix மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-ஐ முன்னுதரணமாக பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நான் அரசியலை தவிர்ப்பதால், எமது ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பிரதிநிதிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எந்த ஆலோசனையும் வழங்கப்போவதில்லை.