எதற்காக இந்த வலைப்பதிவு ?

தனிப்பட்ட கருத்துக்களையும் அவ்வப்போது ஆராய்ச்சி குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு வலைப்பதிவு தேவை என்று நீண்ட காலமாக நான் யோசித்து வருகிறேன். ஐ.எச்.பி. (IHP) இல் நாங்கள் செய்யும் பல வேலைகள் ஒருபோதும் பகிரப்படுவதில்லை – நேரமின்மை அல்லது பணம் இல்லாததால். எனவே சிலவற்றை முறைசாரா அல்லது தற்காலிக வடிவத்தில் பகிர்ந்து கொள்ள வலைப்பதிவு ஒரு நல்ல மேடையாக தோன்றியது. ஐ.எச்.பி.யில் ஆய்வு பணிகள் மற்றும் அன்றாட அலுவல்கள் நிமித்தம் இதை செய்ய இயலாதது வருந்தத்தக்கது. இருப்பினும், நன்றே செய் அதுவும் இன்றே செய் என்று கருதி, வெள்ளிக்கிழமையும் 13-உம் கூடி வரும் நாள் சிலரால் சுபமற்றது என கருதப்பட்டாலும், COVID-19 நெருக்கடி இதை துவங்க வேண்டிய நேரம் இது என்று உந்தியது. தகவல்கள் மற்றும் கருத்துக்களை பரிமாறுவதற்கு இது ஒரு தடமாக இருக்கப்போகிறது. அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன். இது பயனுள்ளதா, படித்ததில் பிடித்தது மற்றும் உடன்பாடில்லாதது என்று எல்லாவற்றையும் எனக்குக் கண்டிப்பாக தெரியப்படுத்தவும்.

வைத்தியர் ரவி ரன்னன்-எலிய
கொழும்பு
13 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை

Leave a Reply