கோவிட்-19 நெருக்கடி விரைவில் முடிவடையாது – நீண்ட கடும் நடை ஒன்றுக்கு நாங்கள் தயாராக வேண்டும்

தற்போவது உள்ள அனைத்து பணிகளின் முடக்கம் இங்கே மட்டுமல்ல, உலகில் உள்ள இரண்டு பில்லியன்/ 20 கோடி மக்களை பாதித்து வருகிறது இது கோவிட்-19 எவ்வளவு அபாயமானது என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தயிருக்க வேண்டும். பலர் இன்னும் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், நம் துறைமுகங்களை மூடுவதோ ஒரு மாதம் வரை அனைத்து பணிகளும் முடக்கப்படுவதோ இப்பிரச்சனைக்கு முடிவு காணாது.

முதலில் நற்செய்தி தொற்றின் எண்ணிக்கையில் தற்போதைய ஏற்றத்தைக் கட்டுப்படுவதை நாங்கள் சரியாகத்தான் அனுகியுள்ளோம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நோய்தொற்று உடையவர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள். மேலும் உள்ளூரில் இதன் பரவல் குறைவு.

இந்த பணி முடக்கம் முடிந்து, வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப ​​குறைந்தது 12 மாதங்களாவது ஆகும். அரசியல் தலைவர்கள் இதை மக்களுக்கு விளங்கப்படுத்தி மக்களை இந்த நீண்ட பயணத்திற்கு தயார்படுத்த வேண்டும். இதேபோன்ற தருணத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய வார்த்தைகளை தழுவி: தற்போதைய (நோய்)பெருக்கை தோற்கடிப்பது முடிவு இல்லை. அது முடிவின் தொடக்கமாகக் கூட இருக்காது. ஆனால் சிலவேளை, அது தொடக்கத்தின் முடிவாக இருக்கலாம். நீண்ட கால உபாயம் என்ன என்பதை பொதுமக்களை நம்பி அவர்களிடம் கூற எந்த முயற்சியும் இல்லாத நிலையில், ஒரு நிபுணராக நமக்கிருக்கும் வாய்ப்புகள் குறித்த ஆலோசனையை நான் வழங்குகிறேன்.

அடுத்த சில மாதங்களைப் பற்றி தெளிவுற கோவிட்-19 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய உண்மைகள்

1. கோவிட்-19 ஃப்ளூ காய்ச்சல் வைரஸை விட அல்லது அதைவிட பயங்கரமான தொற்றுநோயாகும்.

2. கோவிட்-19 பரவுவதற்கு நபர்களிடையே நேரடி தொடர்பு தேவைப்படுகிறது. ‘சமூக தொலைவுநெருக்கமான தொடர்பின் மூலம் வைரஸ் பரிமாற்றத்தை குறைக்கிறது.

3. திடீர்பெருக்குகளை பெருமளவில் சந்தித்த சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் உட்பட, மனிதகுலத்தில் 99%-ற்கு இந்த நோய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை.

4. மார்ச் 2021-ற்கு முன் தடுப்பூசி கிடைக்காது.

5. நல்ல மருத்துவ கவனிப்பு இருந்தால், பாதிக்கப்படும் 300 பேரில் ஒருவர் மட்டுமே இறப்பார். தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை மருத்துவமனையின் காற்றூட்டல் மற்றும் தீவிர சிகிச்சை திறனை மீறிவிட்டால், இந்த கணக்கு 20-ல் ஒன்று அல்லது அதற்கு மேல் போய்விடும்.

கோவிட்-19 இன் தீவிர தொற்றுத்தன்மை மற்றும் இதற்கு முன் வெளிப்பாடும் நோய் எதிர்ப்பு சக்தியும் மக்களிடையே இல்லாததால், அனைவரும் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றவில்லை என்றால் (இது இப்போது பொருந்தாது), கோவிட்-19 உலக மக்கள் தொகையில் 90% பேரை பாதிக்கும். மேலும் இந்த ஆண்டு 40 மில்லியன் /4கோடி மக்கள் இறப்பார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கான மிக சமீபத்திய கணிப்புகளின்படி அடுத்த ஆண்டுக்குள் இறப்புகள் 2 மில்லியனை/20 ல்ட்சத்தை தாண்டிவிடும்.

இந்த அம்சங்களின் அடிப்படையில் எல்லா நாடுகளிலும்கோவிட்-19 தெளிவாக இரண்டு கட்டங்களில் பரவுகின்றது. இதுவரை இரண்டு உலகளாவிய தொற்று அலைகளை ஏற்படுத்தியதோடு, மேலும் பின்தொடரும்.

கோவிட்-19 வைரஸ் பரவுதலின் இரண்டு கட்டங்கள்

ஒரு நாட்டில் தொற்று உடையவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதாவது 100-க்கும் குறைவாக இருந்தால், திடீர்பெருக்கை முறையாக செயல்பட்டு நோயை கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்து அடையாளம் கண்டறிந்து, பின் அவர்களின் அருகாமையில் இருந்த அல்ல நேரடி தொடர்பு கொண்ட நபர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது போன்ற முறையான முயற்சிகளால் நோயின் திடீர்பெருக்கைக் கட்டுப்படுத்தலாம். இது பரிசோதிப்பது மற்றும் தடமறியும் கட்டமாகும். சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தைவான் போன்ற ஒரு சில நாடுகளும், ஹூபாய்க்கு வெளியே உள்ள பெரும்பாலான சீன மாகாணங்களும் இந்த கட்டத்தில் முறையாக செயல்பட்டு நோய் பரவல் இந்தக் கட்டத்தை தாண்டாமல் வைத்தனர். அவர்கள் பொதுவாக முழுமையான பணி முடக்கத்தைத் தவிர்த்து, பள்ளிகளை மூடாமல், மக்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதையும் சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.

Chart caption: முதல் உலக அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் தைவானில் கோவிட் -19 பரவல் மார்ச் 15 வரை புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கையின் போக்கு

பரிசோதனை மற்றும் தடமறிதல் தொடக்கத்திலிருந்து தீவிரமாக இல்லையென்றால், தொற்று சமூகத்தில் மின்னல் போல் பரவி நோய்பெருக்கு இரண்டாவது கட்டத்திற்குள் நுழைகிறது. வைரஸ் அதிவேகமான வளர்ச்சி கண்டு பரவ ஒவ்வொரு 3-5 நாட்களில் தொற்று உடையவர்களின் எண்ணிக்கை இரட்டிக்கும். ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தொற்று உடையவர்களின் எண்ணிக்கை இரட்டித்தால், தொற்றுடையவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100-இல் துவங்கி பிறகு ஒரு மாதத்திற்குப் 6,000 என கூடி, இரண்டு மாதங்களில் 300,000 க்கும் மேல் அதிகரிக்கும். இவ்வாறு பரவினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்யபு மட்டுமே நோயை கட்டுப்படுத்த உதவாது. நோயாளிகள் எண்ணிக்கை மருத்துவமனைகளை மூழ்கடித்து இறப்புகள் வேகமாக கூடும். இத்தாலி, அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இப்போது இந்த கட்டத்தில் உள்ளன. சீன மாகாணமான ஹூபே ஜனவரி மாதத்தில் இந்த கட்டத்தில் இருந்தது.

Chart caption: நோய்பெருக்கின் இரண்டாம் கட்டத்தில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கோவிட் -19 பரவல் மார்ச் 15 வரையிலான புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொற்று உடையவர்களின் எண்ணிக்கையின் போக்கு

நோய் மின்னல் போல் வேகமாக பரவும் இந்த இரண்டாம் கட்டத்தில், அண்றாட வாழ்க்கையின் அனைத்து பணிகளையும் முடக்கி பல வாரங்களுக்கு மக்களை தங்கள் வீடுகளினுள் கட்டுப்படுத்தி வைப்பது மட்டுமே வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கும். இவ்வாறான அனைத்து பணி முடக்கம் கடுமையானதாகவும் நீண்ட காலத்திற்கும் இருந்தால் வாரங்கள் அல்ல மாதக்கணக்கில் முடக்கம் தேவை வைரஸை முற்றும் முறியடித்து விடலாம். சீனாவின் ஹூபேயில் இது நடந்துள்ளது, அங்கு இரண்டு மாதங்கள் சகல பணிகளும் முடக்கப்பட்ட பின்னர், புதிய தொற்றுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு வந்துள்ளது. கொரியாவில், நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் முடக்கி தொற்று எண்களைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டு வந்தள்ளனர்.

Chart caption:சீனாவிலும் கொரியாவிலும் கோவிட்-19 பரவல் (நோய் தீவிரமாக பரவும் இரண்டாம் கட்டத்தில் தொற்றை வெற்றிகரமாக முறியடித்த நாடுகள்) – மார்ச் 15 வரை புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொற்று உடையவர்களின் எண்ணிக்கையின் போக்கு

தொற்று மின்னல்போல் பரவும் இரண்டாம் கட்டம் துவங்கினால், சகல பணிகளையும் முடக்குவதை தவி வேறு வழி இல்லை. இதை கடந்த வாரங்களில் நாங்கள் பார்த்து வருகின்றோம். இவ்வாறான முடக்கம் பெரும் சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும். முடக்கத்தின் விலையை கண்டு அஞ்சி பெரும்பாலான அரசாங்கங்கள் ஸ்தம்பித்துள்ளனர். சில நாடுகள் வைரசை அதன் போக்கில் பரவ விட்டு, அதன் மூலம் சமூகத்தில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, அதன் விளைவாக எதிர்கால தாக்ககங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற கருத்தில் செயல்பட்டனர். ஆனால் தொற்றுகள் அதிகரித்து மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்துவிடுவார்கள் என்பதையும், மரணங்கள் கூடிக்கொண்டேபோகும் என்பதையும் அவர்கள் முன்வைத்தவுடன் அத்திட்டம் கைவிடப்பட்டது. இங்கிலாந்து அரசிடம், ஒரு வருடத்தில் நிகழக்கூடிய கோவிட் மரணங்கள் இரண்டாம் உலகப்போரில் இழந்த உயிர்களைவிட அதிகமாக இருக்கும் என எடுத்துக்கூறப்பட்டது. தற்போதைய நிலைமையில் சீனாவிற்கும் மேற்கத்திய அரசாங்கங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், தங்கள் மக்களைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கும் வரை பெய்ஜிங்கை விட கூடுதலான உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள மேற்கத்திய அரசாங்கங்கள் தயாராக உள்ளனர்.

இதுவரையிலான இரண்டு உலகளாவிய அலைகள்

இறுதியில் எல்லா அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் இரண்டாம் கட்டத்தில் தொற்று 3% மக்களையே பாதிக்கும். சகல பணி முடக்கத்தின் விளைவாக வீட்டினுள்ளேயே இருப்பதனால் 97% சதவித மக்களுக்கு கோவிட்-க்கு நோய் எதிர்ப்பு சக்தி இராது. கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, நோய் முற்றும் அழிக்கப்படாமலிருந்தால் அல்லது வெளிநாட்டில் இருந்து மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், தொற்று அதே வீரியத்துடன் முன்புபோல் தாக்கி, தொற்றுநோய் அலைபோல் மீண்டும் எழும். அதாவது உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் நோய் அழிக்கப்படவில்லை என்றால், அலை அலையாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய தொற்றுநோயுடன் நாங்கள் போராட வேண்டும். இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னும் இது தொடரும்.

தற்போது நாம் உலகை தாக்கியுள்ள நோயின் இரண்டாம் அலையில் சிக்கியுள்ளோம். முதல் அலை ஜனவரி பிப்ரவரி மாத துவக்கம் வரை சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பிரயாணிகளினால் துவங்கியது. இது சீனா, நாட்டைவிட்டு மக்கள் வெளியே செல்ல தடைபோடுமுன் நடந்தது. பல நாடுகள் தீவிர பரிசோதனை மற்றும் தனிமைபடுத்துதல் (சிங்கப்பூர், தைவான், ஹாங் காங்), சகல பணிகளையும் முடக்குதல் (சீனா) மற்றும் பயண கட்டுப்பாடுகள் (முக்கியமாக இலங்கை) போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த முதல் அலையை கட்டுப்படுத்தினர். துரதிட்டவசமாக செயல்பட தாமதித்ததால், ஐரோப்பா, இரான் போன்ற நாடுகளில் திடீர்பெருக்கு பெருமளவில் காணப்பட்டது. அதன் பின்பு உலகின் இரண்டாம் அலையின் துவக்கம் இந்த நாடுகளிலிருந்து துவங்கியது.

இந்த இரண்டாம் அலை, சீனாவில் இருந்து கிளம்பிய முதல் அலையைவிட கூடுதலாக தொற்று உடையவர்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. முதல் அலையை முடக்கிய நாடுகள் ஐரோப்பிய பிரயாணிகளின் வருகையை தவிர்க்கவில்லை. இதனால் இந்த நாடுகள் இரண்டாம் கட்டத்திலும் வெளியிலிருந்து வந்தவர்களால் தான் பாதிக்கப்பட்டுள்ளன இதில் சீனா சிங்கப்பூர், தைவான், இலங்கை உள்ளடங்குவன. இந்த நாடுகள் ஒவ்வொன்றாக சர்வதேச வருகைகளை தடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இலங்கை, சிங்கப்பூர், தற்போது சீனா.

எதிர்கால நோக்கம்

இது 2021-க்குள் நம்மை கடுமையான நிலையில் நுழைவோம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற ஏனைய பெரிய பொருளாதார நாடுகளினுள் வைரசை வேரோடு அழிக்க காலம் கடந்திருக்கலாம். அந்த நாடுகளில் தொற்றின் வீதம் சீனாவைவிட பலமடங்கு பெருகியுள்ளது. இந்த நாடுகள் அன்றாட வாழ்க்கை மற்றும் பிரயாணம் குறித்து தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கி, 2-3 மாத காலமாவது அதைக் கடைபிடித்து, மேலும் அவர்களின் எல்லைகளை முழுமையாக மூடினால் சீனாவின் ஆரம்பக்கால் கட்டுப்பாட்டு நிலையை அடையலாம். ஆனால், சுதந்திர உலகின் தலைவர் என கருதப்படும் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், இரண்டு மாதங்களில் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என நம்பிக்கொண்டு இருக்கும்போது, இது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்த வருடம் முழுவதும் லட்சக்கணக்கிலோ கோடி கணக்கிலோ இந்த வைரசை சுமந்தபடி உலகெங்கிலும் மக்கள் இருக்கத்தான் போகிறார்கள். இந்நிலையில் சமூக தொற்று மிகக் குறைவாக உடைய, பரிசோதனை மற்றும் தடமறியும் கட்டத்திலேயே தங்களை தக்க வைத்துக்கொண்ட சிங்கபூர், கொரியா, வியட்னாமுடன் இலங்கையும் கூட, நாட்டு எல்லைகளை திறந்தால் தொற்றின் அலை மருபடியும் வருவதைத் தவிர்க்க முடியாது. பின் எல்லையை மூடுதலும் அனைத்து பணி முடக்கமும் மீண்டும் துவங்கும். தங்களின் சமீபத்திய நடவடிக்கைகளினால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள் பணி முடக்கத்தை விலக்கும் அளவுக்கு வைரசை அடக்கியுள்ளனர். ஆனால் வைரஸ் உள்நாட்டில் சுழன்று கொண்டிருக்கும்.

நாம் என்ன செய்ய முடியும்?

இந்த சூழ்நிலையில், தடுப்பூசி தயாராகும் வரையில், உலக அளவில் வாணிபம் மற்றும் பிரயாணங்கள் பெரிதும் குறைக்கப்பட்டு ஏதோ ஓரளவிற்கு இயல்புநிலை திரும்பும் என நம்பலாம்.

நாட்டில் வைரஸ் இல்லாமல் செய்வதற்கு முதலில் புதிதாக தொற்று உள்ளவர்கள் உள்ளே வராமல் இருக்க நம் எல்லைகளை மூடி, நாட்டில் ஏற்கனவே உள்ள தொற்று உடையவர்களை கண்டறிய/ தடமறிதல் வேண்டும். தற்பொழுது இதை நாங்கள் செய்து வருகின்றோம். தடமறிதலில் பரிசோதனைகளை கூட்டலாம்.

தொற்று உடையவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைந்தால், மெதுவாக பணி முடக்கத்தை தளர்த்தி பள்ளிகளை திறந்து, கடும் கட்டுப்பாடுகளுடன் எல்லைகளை திறந்து அன்றாட வாழ்க்கைக்கு ஒரளவு திரும்பலாம். வைரஸ் உள்நுழைவதைத் தவிர்க்க தீவிர பரிசோதனையும் தனித்துவப்படுத்துவதும் உடைய உபாயம் அவசியம். மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் மீண்டும் நோய்பெருக்கு ஏற்பட்டால் பணி முடக்கத்தை தவிற்க கடகடவென அதைக் கட்டுப்படுத்த முடியும். சிங்கப்பூர், தைவான் மற்றும் சீனாவின் அனுபவத்திலிருந்து இது சாத்தியம்.

இவ்வாறு செய்தால் பிற நாடுகளைவிட சிறப்பாக செயல்பட கூடலாம், நம் பொருளாதாரத்தை இந்த வருடத்தில் வளர்க்கும் நிலை வரலாம். முரண்பாடாக இருந்தாலும், இதற்கு வைரஸ் இல்லாத சீனா மற்றும் பிற ஆசிய பொருளாதாரங்களுடன் மட்டுமே வர்த்தகத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்பு: இது சண்டே டைம்ஸ் இன்று (29 மார்ச் 2020) வெளியிட்ட கட்டுரையின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும், தலைப்பு, உரை மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றில் சிறிய திருத்தங்கள் மற்றும் தொடர்புடைய குறிப்புகளுக்கு இணைப்புகளைச் சேர்த்தல். எங்கள் கோவிட் -19 தரவின் தரவுத்தளத்தை பராமரிக்கும் ஐ.எச்.பி குழுவினருக்கும் எனது நன்றி.