covidsl – ஒரு உத்தியோகப்பூர்வமற்ற இலங்கை கொரோனா நோய்க்கிருமி பின்தொடர் (ட்ராக்கர்)

கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான இசங்கா விஜரத்னே உருவாக்கிய இலங்கை கோவிட் நிகழ்வுககளின் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படும் இந்த பின்தொடரை(ட்ராக்கரை) நாங்கள் கண்டோம்: http://covidsl.com. இது மொத்த நிகழ்வுகளில் தற்போதைய எண்ணிக்கை மற்றும் மாற்றங்கள், செய்யப்பட்ட சோதனைகள் மற்றும் குணமடைந்தோரின் எண்ணிக்கையை தெரிவிக்கிறது.

அதன் துல்லியத்திற்கு என்னால் உத்தரவாதம் தர இயலாது, ஆனால் அது அதிகாரப்பூர்வ தரவு மற்றும் ஊடக அறிக்கைகளை நம்பியுள்ளது. சுகாதார ஊக்குவிப்பு பணியகம் வழங்கிய ஒரு API-யிலிருந்து அதன் தரவை எடுப்பதாகத் தெரிகிறது – பாராட்டு வெளிப்படைத்தன்மைக்கான அவர்களின் முயற்சிகளுக்கு, மேலும் இதுவரை நான் பார்த்த அளவில் ஒரு இலங்கை அரசாங்க நிறுவனத்தால் ஆன்லைன் தகவல்தொடர்புக்கு மேற்கொள்ளப்பட்ட சிறந்த முயற்சி. அவர்கள் இதைப் படிக்கிறார்களானால், எண்களின் நேரத் தொடரை வழங்க எனது பரிந்துரை.

பகுப்பாய்விற்காக IHP அதன் தரவை எங்கிருந்து பெறுகிறது என்று நீ௩்௧ள் யோசிக்கலாம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் பராமரிக்கப்படும் ஒரு களஞ்சியத்திலிருந்து அதைப் பதிவிறக்குகிறோம். இது WHO, அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் உட்பட பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களைத் தொகுக்கிறது. இங்கே தற்போதைய தரவுடன் தொடர்ந்து புதுப்பிக்கும் ஒரு நல்ல வரைபடம் அவர்கள் தளத்தில் உள்ளது: https://coronavirus.jhu.edu/map.html. Financial Times உட்பட ஏராளமான ஊடக நிறுவனங்கள் இந்த JHU தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதை நான் கவனித்துள்ளேன். அவர்களின் தரவை எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரங்களுக்கு மேல் குடுக்கப்பட்ட தளத்தில் க்ளிக் செய்யவும்.

வெளி ஆதாரங்களையும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நம்பிக்கையுடன் இருந்தால், மற்றும் அரசாங்கம் தரவுகளை பகிர்வதில் வெளிப்படையாகவும், திறந்ததாகவும் இருந்தால் பெறக்கூடிய மதிப்பை இது மீண்டும் காட்டுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து நம்மை மீட்க இது முக்கியம்.